Home இந்தியா 20 ஆண்டுகளாக மோடிக்கு ‘ராக்கி’ கட்டும் பாகிஸ்தான் பெண்!

20 ஆண்டுகளாக மோடிக்கு ‘ராக்கி’ கட்டும் பாகிஸ்தான் பெண்!

719
0
SHARE
Ad

Modirakhiபுதுடெல்லி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் பெண் ஒருவர் ராக்கிக் கயிறு கட்டி தனது சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷமார் மோசின் ஷேக், இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து, இந்திய மருமகளாகக் கடந்த 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்.

மோடி ஆஎஸ்எஸ் உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே அவருக்கு ஷமார் ராக்கி கட்டி வருகின்றார்.

#TamilSchoolmychoice

அதன் அடிப்படையில் இந்த ஆண்டும், ராக்கி கட்டிவிட தனது தங்கையை மோடி அழைத்திருக்கிறார்.

மோடி மிகவும் பரபரப்பாக இருக்கிறாரே நம்மைக் கூப்பிடுவாரோ? என்ற சந்தேகத்தில் இருந்த ஷமார், மோடியின் அழைப்பால் மிகவும் உற்சாகமாகியிருக்கிறார்.