Home இந்தியா கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடைகள் நீக்கம்!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடைகள் நீக்கம்!

842
0
SHARE
Ad

sreesantshகொச்சி – கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வாழ்நாள் தடை விதித்திருந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் ஸ்ரீசாந்தை இதிலிருந்து விடுவித்த போதிலும் பிசிசிஐ அந்தத் தடையை நீக்க முடியாது என்று மனுத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், ஸ்ரீசாந்த் தரப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணை செய்த கேரளா உயர் நீதிமன்றம் அவர் மீதான தடைகளை நீக்கும் படி உத்தரவிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2013-ம் ஆண்டு, இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தின் போது, சூதாட்டக் குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்ரீசாந்துக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.