Home கலை உலகம் கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்துடன் நடிக்க அசின் மறுப்பு?

கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்துடன் நடிக்க அசின் மறுப்பு?

723
0
SHARE
Ad

ஜூலை 15- கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகி சிறையில்  இருந்தார்.

தற்போது ஜாமீனில் வந்துள்ள அவர் சினிமாவில் நடிக்கிறார். மலையாளத்தில் தயாராகும் ‘பிக் பிக்கர்’  என்ற படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். காதல், நகைச்சுவை  படமாக தயாராகிறது. இப் படத்தை பாலசந்திரகுமார் இயக்குகிறார்.

32f02470-b826-40af-8eea-ee52f734aebd_S_secvpfஇதில் ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க நாயகி தேர்வு நடக்கிறது. அசின் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கருதி அவரிடம் பேசியதாகவும், ஆனால் ஸ்ரீசாந்துடன் நடிக்க மாட்டேன் என அவர் மறுத்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

ஸ்ரீசாந்துடன் பல வருடங்களுக்கு முன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகளை அவருடன் தொடர்பு படுத்தி செய்தி மற்றும் படங்கள் வந்தன. இதனால் அந்த நடிகைகள் மன உளைச்சலுக்கு ஆனார்கள். ஸ்ரீசாந்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பும் வெளியிட்டனர்.

இதுபோன்ற சர்ச்சைகள் வரும் என்பதாலேயே அசின் அவருடன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு நடிகையை தேடுகிறார்கள்.