Home கலை உலகம் பிக்பாஸ்: கமலைக் குற்றம்சாட்டும் காயத்ரி!

பிக்பாஸ்: கமலைக் குற்றம்சாட்டும் காயத்ரி!

985
0
SHARE
Ad

Gayathiri1bigbossசென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், காயத்ரியின் அடாவடித்தனம் பற்றியும், பேசும் மோசமான வார்த்தைகள் பற்றியும் கமல் இன்னும் விளக்கமாகக் கேட்கவில்லை என்று பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் விளம்பரக் காணொளியில் காயத்ரி கமலையே குற்றம் சாட்டுகிறார்.

தன்னைக் கெட்ட வார்த்தைகள் பேசுவதாகக் கமல் கூறி வருவது தன்னை சிறுமைப்படுத்தும் படியாக இருப்பதாக காயத்ரி, மற்ற ஹவுஸ்மேட்சுகளிடம் கூறுகிறார்.

மேலும் தன்னைத் திருத்த தனது அம்மாவுக்கு மட்டுமே உரிமை உள்ளதாகவும் காயத்ரி அக்காணொளியில் குறிப்பிடுகிறார்.

#TamilSchoolmychoice

காயத்ரி கூறிய பல மோசமான வார்த்தைகள் விஜய் டிவியால் வெட்டப்பட்டது போக, பேசிய வார்த்தைகளில் கூட, ‘ஹேர்’ என்ற வார்த்தைக்கு மட்டுமே கமல் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.