Home நாடு சீரழித்தவனையே திருமணம் செய்த 12 வயது சிறுமி நலம்: அமைச்சர் தகவல்!

சீரழித்தவனையே திருமணம் செய்த 12 வயது சிறுமி நலம்: அமைச்சர் தகவல்!

758
0
SHARE
Ad

Rohani Abdul Karimகோலாலம்பூர் – சபாவில் தன்னைப் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டவனையே திருமணம் செய்த 12 வயது சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரோஹானி அப்துல் கரீம் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில், தற்போது கோத்தா கினபாலுவில் அப்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருவதாகத் தெரிவித்தார்.

தற்போது 16 வயதுடைய அப்பெண், கடந்த 2015-ம் ஆண்டு தன்னை பாலியல் வல்லுறவு புரிந்து, 12 வருட காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரிதுவான் மாஸ்முத் (வயது 44) என்பவரையே திருமணம் செய்ததாக ரோஹானி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி, அப்பெண்ணை அவரது குடும்பத்துடன் சந்தித்தோம். அவள் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரது கணவர் தற்போது சிறையில் இருக்கிறார்” என்று ரோஹானி நாடாளுமன்றத்தில் கூறினார்.