Home கலை உலகம் காயத்ரியிடம் கமல் கேட்ட கேள்விகள் உங்களைத் திருப்திபடுத்தியதா?

காயத்ரியிடம் கமல் கேட்ட கேள்விகள் உங்களைத் திருப்திபடுத்தியதா?

1042
0
SHARE
Ad

Bigbosskamalசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி மட்டும் உலக அளவில் மிகப் பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, ஓவியாவை ஒதுக்கி வைத்த ஹவுஸ்மேட்சுகளைக் குடைந்து குடைந்து கமல் கேள்வி கேட்கப் போகிறார் என்பது தான்.

அதிலும் குறிப்பாக, காயத்ரியின் அடாவடித்தனங்கள் குறித்தும், அவர் பேசும் மோசமான வார்த்தைகள் குறித்தும் கமல் கண்டுகொள்ளவில்லை, காயத்ரியை கேள்வி கேட்காமலேயே நடத்துகிறார் என்ற ஆதங்கம் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில வாரங்களாகவே நிலவி வந்தது.

#TamilSchoolmychoice

டுவிட்டர், இணையம் வழியாக அதனை ரசிகர்கள், கமல், பிக்பாஸ் குழுவினருக்கும் கொண்டு சேர்த்தனர்.

ரசிகர்களின் இந்த ஆதங்கம் நிச்சயமாக கமலின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள், கமலின் நேற்றைய கேள்விகளில் இருந்தது.

கணேசைப் பார்த்து, ‘இன்ஹியூமன் என்ற வார்த்தையை பரணி சுவர் ஏறிக் குதிக்கும் போது ஏன் கூறவில்லை?’

சக்தியைப் பார்த்து, ‘ஓவியாவிடம் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை?’

ஜூலியைப் பார்த்து, ‘ஓவியாவின் மன உளைச்சலுக்கு நீங்கள் செய்த துரோகமும் ஒரு காரணமா?’

ஆரவ்விடம் அந்த முத்த விவகாரம், போன்ற கமலின் கேள்விகளும், உடல்மொழிகளும் மக்களின் கேள்விகளை அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலித்தது.

ஆனால், காயத்ரியிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதாவது மக்கள் கேட்க நினைத்த கேள்விகளை, கமல் வெளிப்படையாக காயத்ரியிடம் கேட்டாரா? என்றால் ‘இல்லை’ என்றே சொல்லத் தோன்றுகிறது.

வீட்டில் ஒரு சிலரால் நாட்டாமைத்தனம் நிலவுகிறது என்பதை ரைசா மறைமுகமாக ஒப்புக் கொண்டார். காயத்ரி, சக்தி தான் அதிக அளவில் நாட்டாமைத் தனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்படி இருந்தும் கூட, காயத்ரியிடம் அவரது நாட்டாமைத்தனம் குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை?

காயத்ரி ‘ஹேர்’ என்ற ஒரு கெட்டவார்த்தையை மட்டுமா பயன்படுத்தினார்? அதை விட ஒரு சமூகத்தையே கேவலப்படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தினாரே அதைக் கேட்டிருக்கலாமே?

பரணி மீது பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குற்றம் சாட்டியவர்களில் நமீதாவுக்கு அடுத்து காயத்ரி தான் முக்கியக் காரணமாக இருந்தார். அதைப் பற்றி ஏன் கேட்கவில்லை?

இப்படியாகப் பல கேள்விகள் இன்னும் காயத்ரி விசயத்தில் கேள்வியாக இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆனால், ஒன்று நன்றாகப் புரிந்தது. நேற்று காயத்ரியிடம் கமல் காட்டிய உடல்மொழியும், கண்களால் மிரட்டலும், ‘இப்படி குடும்ப மானத்த வாங்குறியே?” என்பது போலான தந்தையின் கண்டிப்பாகவே தான் தெரிந்தது.

அத்தனை நாட்கள் வன்மத்தையும், வெறுப்பையும், சூழ்ச்சியையும் காட்டிவிட்டு, ஓவியா வீட்டை விட்டு கிளம்பப் போகிறார் என்று உறுதியாகத் தெரிந்தவுடன் இறுதி நேரங்களில் உற்சாகத்தில் காட்டிய அன்பில், ‘அழகு’ எங்கே இருக்கிறது? அதை குறிப்பிட்டு சுட்டிக் காட்டி நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் முயற்சியாகவே தெரிந்தது.

Gayathiribigbossகமல் கூறியது போல் காயத்ரியின் முகம் மாறியது உண்மை தான். ஆனால் அவர் தனது தவறை உணர்ந்ததாக அவர் பேச்சில் கடைசி வரைத் தெரியவில்லை.

‘நான் இவ்வளவு மாத்துனதே பெரிசு’ – என்பது போலான திமிரான பேச்சு தான் வெளிப்பட்டது.

காயத்ரியிடம் கமல் கேட்ட கேள்விகள் உங்களைத் திருப்திபடுத்தியதா? ‘கமண்ட் பாக்சில்’ உங்களது கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

-செல்லியல் தொகுப்பு