Home கலை உலகம் ராகாவின் ஸ்டார் குரல் தேடல் தொடங்கியது!

ராகாவின் ஸ்டார் குரல் தேடல் தொடங்கியது!

914
0
SHARE
Ad

Raagaavinstarகோலாலம்பூர் – பாடுவதில் ஆர்வமா? நன்றாக பாடும் திறமை உண்டா? உங்கள் பாடும் திறமையை நிரூபிக்க இதோ காத்திருக்கிறது ராகாவின் ஸ்டார்.

திறமையான பாடகர்களைக் கண்டறியும் முயற்சியில் டிஎச்ஆர் ராகா வானொலி நிலையம் ராகாவின் ஸ்டார் எனும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான குரல் தேடல் நேற்று ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 11-ம்  தேதி வரை நட்பு ஊடகத்தில் இடம்பெறவிருக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் ஒரு பாடலைப் பாடி அதனைக் காணொளியாகப் பதிவுச் செய்து இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அக்காணொளியைப் பதிவேற்றம் செய்யும் பொழுது #RaagaStar எனும் சொல்லை ஹேஸ்டேக் செய்ய மறவாதீர்கள்.

#TamilSchoolmychoice

பிறகு, நியமிக்கப்பட்ட நடுவர் குழு அவற்றுள் சிறந்த 10 பாடகர்களின் காணொளிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். மலேசியாவின் பிரபல இசையமைப்பாளர்கள் நடுவர்களாக இப்போட்டியில் பணியாற்றவிருக்கின்றனர்.

தேர்தெடுக்கப்பட்ட 10 காணொளிகளும் டிஎச்ஆர் ராகாவின் அகப்பக்கத்தில் பொதுமக்கள் வாக்களிக்க பதிவேற்றம் செய்யப்படும். இந்த வாக்களிப்பு ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை raaga.fm அகப்பக்கத்தில் இடம்பெறும்.

அதிக வாக்குகள் பெறும் டாப் 5 போட்டியாளர்கள் தேர்தெடுக்கப்பட்ட 5 மலேசிய உள்ளூர் இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு போட்டியாளரும் கொடுக்கப்பட்ட 5 நாட்களுக்குள் ஒரு பாடலை உருவாக்க வேண்டும்.

பாடலை உருவாக்கிய பிறகு டாப் 5 போட்டியாளர்களும் எதிர்வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி சனிக்கிழமை டிஎச்ஆர் ராகா முகநூலில் இடம்பெறவுள்ள நேரடி ஒளிபரப்பு கலைநிகழ்ச்சியில் அப்பாடலைப் பாட வேண்டும். சவால்மிகுந்த இந்தச் சுற்றுதான் ராகாவின் ஸ்டார் போட்டியின் வெற்றியாளரை நிர்ணயிக்கும்.

நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் நிலை வெற்றியாளர் 3,000 ரிங்கிட் ரொக்கம் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்புக் காத்து கொண்டிருக்கின்றது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்கு முறையே 2,000 ரிங்கிட் மற்றும் 1,000 ரிங்கிட் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, இறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெறும் முதல் 5  போட்டியாளர்கள் எதிர்வரும் செப்டம்பர் 24-ம் தேதி  ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவுள்ள அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் டிஎச்ஆர் ராகா கலைநிகழ்ச்சியின் போது பாடும் வாய்ப்பும் வழங்கப்படவிருக்கிறது.

மேல் விவரங்களுக்கு raaga.fm அகப்பக்கத்தை நாடுங்கள்.