தான் மட்டுமின்றி தனது அமைச்சரவையின் கீழ் இருக்கும் அனைவருமே ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சாஹிட் உறுதியளித்தார்.
புத்ராஜெயா குடிநுழைவு இலாகா தலைமையகத்தில் இன்று காலை குடிநுழைவு இலாகாவின் இயக்குநர் முஸ்தபார் அலி மற்றும் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஊழலுக்கு எதிரான வாக்குறுதியை எடுத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாஹிட், “நான், உள்துறை அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறோம்”
“நாங்களும், எங்களைச் சார்ந்தவர்களும், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உறுதிப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதிக நேர்மையுடன் இருந்தால் அது சாத்தியம் தான்” என்று சாஹிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 1996-ம் ஆண்டு தான் பிரதமராக இருந்த போது, சாஹிட் தனது வங்கிக் கணக்கில் இருந்த 230 மில்லியன் ரிங்கிட் குறித்து முறையான கணக்கறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.