Home உலகம் அல்ஜசீரா அலுவலகத்தை மூட இஸ்ரேல் முடிவு!

அல்ஜசீரா அலுவலகத்தை மூட இஸ்ரேல் முடிவு!

788
0
SHARE
Ad

Al-Jazeeraஜெருசேலம் – ஜேவிஸ் அரசுக்கு எதிராக ஒருதலைப் பட்சமாகக் குரல் கொடுப்பதாக, கத்தாரைச் சேர்ந்த அல்-ஜசீரா அனைத்துலகச் செய்தி நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டும் இஸ்ரேல், தமது நாட்டில் ஜெருசேலம் நகரில் அமைந்திருக்கும் அல்-ஜசீரா அலுவலகத்தை விரைவில் மூடத் திட்டமிட்டிருக்கிறது.

இது குறித்து இஸ்ரேல் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆயோப் காரா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜெருசேலம் அல்-ஜசீரா அலுவலகம் மூடப்படுவதோடு, அதில் பணியாற்றி வரும் ஊழியர்களின் ஊடக உரிமத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், அச்செய்தி நிறுவனத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதாகவும், அல்-ஜசீரா தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஆயோப் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice