Home இந்தியா சசிகலா, தினகரனுக்கு எதிராகத் தீர்மானம்: எடப்பாடி அணி அதிரடி!

சசிகலா, தினகரனுக்கு எதிராகத் தீர்மானம்: எடப்பாடி அணி அதிரடி!

764
0
SHARE
Ad

Sasi-TTVசென்னை – அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி இன்று வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அதில், ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே அந்தந்தப் பொறுப்புகளை நிர்வகிப்பார்கள் என்றும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவால் கட்சிக்குள் கொண்டு வரப்பட்ட தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#TamilSchoolmychoice

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு இரண்டாக உடைந்த அதிமுக கட்சியை இணைப்பது குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதேவேளையில், சசிகலா குறித்து கூறுகையில், அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், இந்திய தேர்தல் ஆணையத்தில் சசிகலா நியமனம் செல்லாது என வழக்குத் தொடரப்பட்டிருப்பதாலும் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவரது வழிகாட்டுதலின் படி கட்சியை நடத்தி வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தங்களது தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர்.