Home இந்தியா நீல நிறத்திற்கு மாறும் மும்பை நாய்கள்: பின்னால் மறைந்திருக்கும் சோகம்!

நீல நிறத்திற்கு மாறும் மும்பை நாய்கள்: பின்னால் மறைந்திருக்கும் சோகம்!

1058
0
SHARE
Ad

mumbaidogs1மும்பை – மும்பை நகரில் சுற்றித் திரியும் தெருநாய்கள் நீல நிறத்தில் இருப்பதைக் கண்டு சிரிப்பு வரலாம். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் மனிதனின் பொறுப்பற்ற செயல்களால் இயற்கை எவ்வளவு பாதிப்படைகிறது? அந்த இயற்கையைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் எவ்வளவு பாதிப்படைகின்றன? என்பது இதுவும் ஒரு உதாரணம்.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மும்பை பகுதியில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்றான கசாடி ஆற்றில், கலக்கப்படும் அதிகப்படியான தொழிற்சாலைக் கழிவுகளால் தான் அப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் நீல நிலத்தில் சாயம் பூசப்பட்டது போல் மாறியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

உள்ளூர் மாநகராட்சி அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரைச் சோதனை செய்துவிட்டு, அதில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

mumbaidogs3மேலும், அதில் கலந்திருக்கும் குளோரைடின் அளவும் விவசாயம், மனிதர்கள், உயிரினங்களுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் மிக அதிகமாக இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறது. நீரில் கலந்திருக்கும் மாசு, பாதுகாப்பு அளவை விட 13 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறது.

இதனிடையே, விலங்குகள் ஆர்வலர்கள், மீனவர்கள் ஆகியோர் பல மாதங்களாக இது குறித்துத் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், மகாராட்ஷ்ரா மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நீல நிற சாயம் மற்றும் வேதிப் பொருட்கள் கலந்த கழிவுநீர் அப்படியே இந்த ஆற்றில் நேரடியாகக் கலப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

தற்போது, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை மூடும் படி மகாராட்ஷ்ரா மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.