Home உலகம் குவாம் மக்களை அலற வைத்த வானொலி நிலையங்கள்!

குவாம் மக்களை அலற வைத்த வானொலி நிலையங்கள்!

993
0
SHARE
Ad

kimjongun-guamஹகாட்னா – அமெரிக்காவின் தீவுகளில் ஒன்றான குவாமைத் தாக்க வடகொரியா திட்டம் தீட்டி வரும் நிலையில், குவாம் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

அந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நேற்று செவ்வாய்க்கிழமை அத்தீவைச் சேர்ந்த இரு வானொலி நிலையங்கள், எந்த நேரத்திலும் குவாம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அவசரப் பிரகடனத்தை தவறுதலாக அறிவித்துவிட்டன.

இதனால் மக்கள் மிகவும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், உடனடியாக செயல்பட்ட அத்தீவின் பாதுகாப்பு அலுவலகம், மக்களை அமைதி காக்கும் படி அறிவித்ததோடு, அதிகாரப்பூர்வமற்ற அத்தகவல் குறித்து யாரும் அஞ்ச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது.

வடகொரியாவின் தேசிய ஊடகம் சில தினங்களுக்கு முன் வெளியிட்ட செய்தியில், குவாமைத் தாக்கும் விளக்கமான வரைபடத்துடன் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது இராணுவ அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது போன்ற படம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.