பியோங் யாங் – அமெரிக்காவுக்கு விடுத்தது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்காவின் குட்டித் தீவுகளில் ஒன்றான குவாமை நோக்கி வீசப்போகும் ஏவுகணைகள் பற்றிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது வடகொரியா.
இன்று செவ்வாய்க்கிழமை வடகொரியாவின் அரசு ஊடகத்தில், அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன், ஏவுகணை வீசப்போகும் பகுதிகளின் வரைபடத்தை கையில் வைத்து இராணுவ அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது போன்ற படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அந்த வரைபடத்தில் வடகொரியாவின் கிழக்குக் கடற்பகுதி வழியாகச் செல்லும் ஏவுகணை, ஜப்பான் வழியாகச் சென்று குவாமைத் தாக்குவது போன்ற வழித்தடங்கள் காணப்படுகின்றன.