Home கலை உலகம் பிக்பாஸ் திருவிளையாடல்: வெளியேற முடிவெடுக்கும் ரைசா!

பிக்பாஸ் திருவிளையாடல்: வெளியேற முடிவெடுக்கும் ரைசா!

851
0
SHARE
Ad

raizabigbossசென்னை – பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் வெளியேறுவோர் பட்டியலில் இருந்த காயத்ரி, பிக்பாசால் கொடுக்கப்பட்ட கேள்வி பதில் அங்கத்தில் 5 கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லி வெளியேற்றத்தில் இருந்து தப்பித்தார்.

இது அவருக்கு எதிராக வாக்களித்த பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளித்தது. வார இறுதியில் கமல்ஹாசனுடன் கலந்துரையாடல் செய்த நடிகை ஸ்ரீபிரியா கூட இதைப் பற்றி வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினார்.

அதற்கு கமல்ஹாசன் தரப்பிலும், விஜய் டிவி தரப்பிலும் மழுப்பலான பதிலே தரப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை ஒளிபரப்பிய நிகழ்ச்சியில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் காயத்ரி மற்றும் ரைசாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை முதல் பார்வையாளர்களின் வாக்களிப்பு தொடங்கியது.

ஏற்கனவே காயத்ரி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் பார்வையாளர்கள் அவருக்கு எதிராக வாக்களித்து வருகின்றனர். அதனை வெளிப்படையாகவும் நட்பு ஊடகங்களில் கூறி வருகின்றனர்.

ஆனால் விஜய் தொலைக்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் விளம்பரக் காணொளியில் ரைசாவின் நடவடிக்கை திடீரென மாறியது போல் காட்டியிருக்கிறது.

பகலில் தூங்க முடியவில்லை என்றால், தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு ரைசா, பிக்பாசிடம் கூறுகிறார். எனவே இந்த வாரம் வெளியேறப் போவது காயத்ரியா? அல்லது ரைசாவா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இரவு முழுவதும் போட்டியாளர்களைத் தூங்க விடாதபடி பேய் விளையாட்டையும் கொடுத்து விழிக்க வைத்து விட்டு, பகலிலும் தூங்கக் கூடாது என்று சொல்லி பிக்பாஸ் அருமையாக விளையாடுகிறார்.

ரைசா தூங்கவில்லை என்றால் மன உளைச்சலுக்கு உள்ளாவார் என்பதை பிக்பாஸ் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.