கோலாலம்பூர் – இங்குள்ள பழைய கிள்ளான் சாலையில் இயங்கிவரும் விகாஸ் அனைத்துலகப் பள்ளியில் 71-ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்ட கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை 13 ஆகஸ்ட் 2017-ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைவர் திரு.யூசுஃப் பின் மீரா இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சாதனா, சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
#TamilSchoolmychoice
இதையடுத்து மாணவர்களுக்கு இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன. பின்னர் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய சுதந்திர தினக் கொண்டாட்டம் களைகட்டியது.
தேசத் தலைவர்கள் போன்று மாணவர்கள் வேடமிட்டு வலம் வந்தனர். அழகான நடனங்களும், இனிமையான பாடல்களும் அரங்கேற்றப்பட்டன.
விகாஸ் பள்ளி வளாகமும் இந்திய சுதந்திர தினத்தைக் குறிக்கும் வண்ணம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.