Home நாடு அமரர் பூ.அருணாசலம் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

அமரர் பூ.அருணாசலம் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

1040
0
SHARE
Ad

arunasalam-poo-sg-siput-deceasedசுங்கை சிப்புட் – மறைந்த எழுத்தாளர் பூ.அருணாசலம் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் எதிர்வரும்  10 செப்டம்பர் 2017ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு சுங்கை சிப்புட் ஆலயத்தில் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு முதல் நாள் 9 செப்டம்பர் 2017ஆம் தேதி பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கி, மறுநாள் நண்பகல் வரை இலக்கிய சந்திப்பும், சங்கத்தின் வசமுள்ள நூல்களை வெளியீடு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

9.9.2017ஆம் தேதி காலை 8.00 மணிக்கு எழுத்தாளர் சங்கப் பணிமனையிலிருந்து சிறப்பு பேருந்தில் சுங்கை சிப்புட் நோக்கி 30 பேர் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சித்தியவான், லுமூட் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்கேயே தங்கி மறுநாள் காலையில் நமது நிகழ்ச்சியிலும் மதிய உணவிலும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

பேருந்து, உணவு ஆகிய செலவுகளுக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்யும்.

தங்கும் வசதிக்கான செலவை மட்டும் பங்கேற்பாளர்கள் ஏற்க வேண்டும்.

இந்தப் பயணத்தில் மொத்தம் மொத்தம் 30 பேருக்குதான் வாய்ப்பு என்பதால் பங்குபெற விரும்புகிறவர்கள் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு லுமூட் ரிசோர்ட்ஸில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சராசரியாக ஒருவர் நூறு வெள்ளி செலுத்த வேண்டும்.
இராஜேந்திர சோழன் சம்பந்தப்பட்ட நினைவுச் சின்னங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகத்தையும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

அங்குள்ள எழுத்தாளர்கள் வாசகர்களுடன் சந்திப்புகளும் நடைபெறும்.
.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் 21.8.2017ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

தொடர்புக்கு: பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், செல்பேசி: 013-3609989