Home இந்தியா ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம்!

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம்!

836
0
SHARE
Ad

jayalalithaa759சென்னை – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலவர் பழனிசாமி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுக, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என மாறியது.

சசிகலா தரப்பு, நிர்வாகிகளின் ஆதரவோடு பதவியில் அமர நினைத்த நேரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா சிறைக்குச் சென்றார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் கட்சியில் ஏற்பட்ட மாற்றங்களால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

தற்போது, அதிமுக, தினகரன் அணி, பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணி என மூன்றாகப் பிரிந்து ஒருவரையொருவர் குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ‘வேதா நிலையம்’ அரசு நினைவிடமாக அமைக்கப்படும் என்றும் பழனிசாமி அறிவித்தார்.