புதுடெல்லி – 30 ஆண்டுகால இலங்கைப் போரில், சமாதானத்தூதுவராகச் செயல்பட்ட நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹெம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரகாரனைப் பற்றியும், பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் பிரபாகரனைப் பற்றியும் மிகவும் சோகத்துடன் பலத் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.
அவற்றில், பிரபாகரனுடனான தனது நட்புறவு, போரின் போது நடந்த சில சம்பவங்கள் உள்ளிட்டவைகளும் அதில் அடங்கியிருக்கின்றன.
இதனிடையே, பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டதாகத் தான் உறுதியாக நம்புவதாக எரிக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், கொல்லப்பட்ட பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் தங்களால் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போனதை எண்ணி தான் மிகவும் வருந்துவதாகவும் எரிக் தெரிவித்திருக்கிறார்.