Home இந்தியா ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைகின்றன – ஆளுநர் தமிழகம் வருகிறார்!

ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைகின்றன – ஆளுநர் தமிழகம் வருகிறார்!

828
0
SHARE
Ad

OPS-EPS-COMBOசென்னை – முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாக உடைந்த அதிமுக தற்போது பழனிசாமி அணி (இபிஎஸ்), பன்னீர்செல்வம் அணி (ஓபிஎஸ்), தினகரன் அணி என மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது.

இந்நிலையில், பலக்கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பன்னீர்செல்வம் அணியும், பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் அதிகாரப்பூர்வமாக இணையவிருக்கின்றனர்.

இந்த இணைப்பிற்குப் பிறகு, அமைச்சரவை, நிர்வாக மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.

#TamilSchoolmychoice

இதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.