Home நாடு தலைகீழான இந்தோனிசியக் கொடி: போலீஸ் விசாரணை!

தலைகீழான இந்தோனிசியக் கொடி: போலீஸ் விசாரணை!

950
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – சீ விளையாட்டுப் போட்டிகளின் நினைவுப் புத்தகத்தில் இந்தோனிசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருப்பதில் நாசவேலை எதுவும் நடந்திருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறை அதனை விசாரணை செய்து வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.

“ஆமாம்.. நாங்கள் விசாரணை செய்து வருகின்றோம். நாசவேலை நடந்திருப்பதற்கான கூறுகளை ஆராய்ந்து வருகின்றோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி, இந்தோனிசிய தேசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருப்பதில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தவும் தான் உத்தரவிட்டிருப்பதாகவும் சாஹிட் குறிப்பிட்டார்.