Home நாடு ஊக்க மருந்துக் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய வீராங்கணை!

ஊக்க மருந்துக் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய வீராங்கணை!

877
0
SHARE
Ad

NgYanYeeகோலாலம்பூர் – மலேசிய டைவிங் (நீச்சல்) வீராங்கணை வெண்டி நங் யான் யீ, ஊக்க மருந்துப் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் தெரிய வந்திருப்பதால், கடந்த ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில், அவர் பெற்ற தங்கப்பதக்கத்தைத் திரும்பக் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஊக்கமருந்துக்கு எதிரான உலக நிறுவனத்தின் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சிபுட்ராமின் என்ற ஊக்கமருந்து வெண்டியின் ‘பி’ மாதிரியில் கண்டறியப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து 3 மீட்டர் ஸ்பிரிங் போர்ட்டு தனிநபர் பிரிவில் இறுதிப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து 24 வயதான வெண்டி பங்குபெற்றார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன், வெண்டியின் பி மாதிரியை இந்தியா பரிசோதித்துப் பார்த்தது.

இதனை மலேசிய தன்னார்வ நீச்சல் சங்கத்தின் செயலாளர் மா சென் உறுதிப்படுத்தியிருக்கிறார்.