Home நாடு கட்சி பேதமின்றி மலேசியராக விளையாட்டை ரசித்த தலைவர்கள்!

கட்சி பேதமின்றி மலேசியராக விளையாட்டை ரசித்த தலைவர்கள்!

980
0
SHARE
Ad

Khairy1கோலாலம்பூர் – சீ விளையாட்டுப் போட்டியின் போது கட்சி பேதமின்றி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதினும், எதிர்கட்சியைச் சேர்ந்த லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வாரும் ஒன்றாக அமர்ந்து மலேசிய அணியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர்.

இதனைத் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கும் கைரி, “இன்று இரவு அரசியல் கட்சிகள் கிடையாது, மலேசியா மட்டும் தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனை நூருல் இசாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கைரிக்கு நன்றி சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice