Home உலகம் போர்க்கப்பல் மோதல்: மாயமான 10 வீரர்களின் சடலங்கள் மீட்பு!

போர்க்கப்பல் மோதல்: மாயமான 10 வீரர்களின் சடலங்கள் மீட்பு!

852
0
SHARE
Ad

usa-navy-uss john s.mccainசிங்கப்பூர் – கடந்த வாரம் சிங்கப்பூர் கடற்பகுதியில், எண்ணெய் கப்பலுடன் மோதிய அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜோன் எஸ். மெக்கெயில் இருந்த 10 கடற்படை வீரர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கக் கடற்படை இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி, நடந்த இந்த விபத்தின் போது, அதிலிருந்த 10 வீரர்களும் கடலில் மூழ்கி மாயமாகினர்.

அதனையடுத்து, முக்குளிப்போரை வைத்து நடத்தப்பட்ட தேடுதல் பணியில், மாயமான 10 வீரர்களும் கடலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்த 10 வீரர்களின் சடலங்களையும் முக்குளிப்போர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.