Home கலை உலகம் ‘ராகாவின் ஸ்டார்’ வெற்றி மகுடத்தை வென்றார் திவேஸ்

‘ராகாவின் ஸ்டார்’ வெற்றி மகுடத்தை வென்றார் திவேஸ்

785
0
SHARE
Ad

Group Pictureகோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை, அஸ்ட்ரோ புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற ‘ராகாவின் ஸ்டார்’ இறுதிச் சுற்றில் திவேஸ் தியாகராஜா முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினார்.

இந்த இறுதிச் சுற்றில் அருள்வேந்தன் மனோகரன், நிமலன் கிருஷ்ணன், சபேஷ் மன்மதன், அணு ரஞ்சினி அன்பழகன் மற்றும் திவேஸ் தியாகராஜா ஆகியோர் களமிறங்கினார்கள்.

இந்த 5 போட்டியாளர்களும், 5 மலேசிய உள்ளூர் இசையமைப்பாளர்களுடன் இணைந்து 5 நாட்களில் ஒரு பாடலை உருவாக்கும் பணி வழங்கப்பட்டது. அந்த வகையில் ஜெய், லாரன்ஸ் சூசை, டி.ஜே. கன், சுந்தரா மற்றும் ஜித்திஸ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட போட்டியாளருடன் இணைந்து பணியாற்றினார்கள்.

#TamilSchoolmychoice

இந்த 5 இசையமைப்பாளர்களின் இசையில் உருவாக்கப்பட்ட அந்த பாடலைப் போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பாடினார்கள்.

Raagavin Star Champion - Deeveshசவால்மிக்க இப்போட்டியின் இறுதியில் திவேஸ் முதல் நிலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாம் நிலை வெற்றியாளராக சபேஷ் 2,000 ரிங்கிட் ரொக்கமும், மூன்றாம் நிலை வெற்றியாளராக நிமலன் 1,000 ரிங்கிட் ரொக்கத்தையும் தட்டிச் சென்றனர்.

அதை வேளையில், இறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்ற இந்த 5  போட்டியாளர்கள் எதிர்வரும் செப்டம்பர் 24-ம் தேதி  ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவுள்ள அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் டி.எச்.ஆர் ராகா கலைநிகழ்ச்சியில் பாடவிருக்கிறார்கள்.

இம்மாபெரும் இறுதிச் சுற்றின் நீதிபதிகளாக நாட்டின் பிரபல பாடகர்களான பிரீதா பிரசாத், சித்தார்த்தன் மற்றும் டிஎச்ஆர் ராகாவின் அறிவிப்பாளர் ஆனந்தா ஆகியோர் பணியாற்றினர்.

இந்நிகழ்ச்சியை டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் உதயா, ராம், ரேவதி, கவிமாறன், சுரேஷ், அகிலா, ஷாலு, ஜெய் மற்றும் யாசினி மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.