Home நாடு கெட்கோ விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்கிறது எம்ஏசிசி!

கெட்கோ விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்கிறது எம்ஏசிசி!

910
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – பகாவ், கெட்கோ நிலம் ஏலத்தில் எடுக்கப்பட்ட விவகாரத்தில், ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதால், இவ்விவகாரத்தை இன்னும் ஆழமாக விசாரணை செய்ய, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ சுல்கிப்ளி அகமட் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

சுமார் 40 கோடி ரிங்கிட் மதிப்புள்ள கெட்கோ நிலத்தை 1 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டிற்கு கைமாற்றியிருப்பதாக தாமரை ஹோல்டிங்ஸ் மற்றும் சிங்கம் அண்ட் யோங் நிறுவனங்களுக்கு எதிராக கெட்கோ நிலத்தில் வசித்து வந்த இந்தியர்கள் புகார் மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் அதிரடியாகக் களமிறங்கியிருக்கிறது. அதற்கு முதற்கட்டமாக நேற்று கெட்கோ குடியிருப்பிற்கு நேரில் சென்று பார்வையிட்ட சுல்கிப்ளி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

பின்னர், இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுல்கிப்ளி உறுதியளித்தார்.