Home நாடு சீ விளையாட்டு: கராத்தே பிரிவில் மலேசியாவுக்கு 7 தங்கம்!

சீ விளையாட்டு: கராத்தே பிரிவில் மலேசியாவுக்கு 7 தங்கம்!

845
0
SHARE
Ad

Seagamesகோலாலம்பூர் – கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 29-வது சீ விளையாட்டுப் போட்டியில், கராத்தே பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த நான்கு இளம் இந்திய பெண்கள் தங்கம் வென்றனர்.

கடந்த மூன்று நாட்களாக கேஎல்சிசி காரத்தே போட்டி நடைபெற்றது.

அதில் கடைசி நாளான நேற்று வியாழக்கிழமை, மலேசிய அணி 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றனர்.

#TamilSchoolmychoice

பெண்களுக்கான குமித்தே பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த மாதுரி, மதிவாணி, ஸ்ரீஷர்மினி, ஷகிலா ஆகிய நான்கு பேரும், ஆண்டுகளுக்கான குமித்தே பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த அரவிந்தன், கோவிநாஷ், புவனேஸ்வரன், சோமன்ராய் ஆகியோரும் களமிறங்கினர்.

இதில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் வெள்ளிப்பதகக்கமும் மலேசியாவுக்குக் கிடைத்தது.