Home நாடு புதிதாகப் பிறந்த பேரனைக் கொஞ்சி மகிழும் நஜிப், ரோஸ்மா!

புதிதாகப் பிறந்த பேரனைக் கொஞ்சி மகிழும் நஜிப், ரோஸ்மா!

652
0
SHARE
Ad

Najib'snewgrandsonadamகோலாலம்பூர் – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோரும் தங்களது புதிய பேரன் ஆதம் ரசாக்கை மகிழ்ச்சியுடன் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நஜிப்பின் மகள் நூர்யானா நாஜ்வா என்ற ஜினா, ஆதமை நல்லபடியாகப் பெற்றெடுத்து, இரு குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து நஜிப் தனது டுவிட்டரில் பகிர்ந்திருக்கும் தகவலில், “என்னுடைய புதிய பேரன், ஆதம் ரசாக்! அல்ஹம்துலில்லா, இறைவனைப் போற்றுகிறேன். ஜினாவும், அவளது குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நூர்யானா நாஜ்வாவிற்கும், கசாக் நாட்டவரான டேனியார் கெசிபாயேவுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது அத்தம்பதிக்கு முதல் வாரிசாக ஆதம் பிறந்திருக்கிறார்.