இதனைத் தொடர்ந்து அந்த 19 பேரும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நீக்கப்பட அவைத்தலைவர் தனபால் எச்சரிக்கைக் கடிதம் (நோட்டீஸ்) அனுப்பியிருக்கிறார்.
அந்த 19 பேரும் தமிழக சட்டமன்றத்திலிருந்து நீக்கப்பட்டால், அதன் காரணமாக தமிழக அரசு கவிழுமா? எடப்பாடியும் பன்னீர் செல்வமும் தொடர்ந்து தங்களின் பெரும்பான்மையை நிலைநிறுத்த முடியுமா? என்பது போன்ற கேள்விகளோடு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு கூடியுள்ளது.