Home நாடு எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல் – நஜிப் அறிவிப்பு!

எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல் – நஜிப் அறிவிப்பு!

1130
0
SHARE
Ad

Najib-கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நஜிப், “பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில், இந்த ஆண்டிற்கான அம்னோ பொதுத்கூட்டம் ஒத்தி வைக்கப்படலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தேசிய முன்னணி பொதுத்தேர்தலுக்கான தனது வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கிறது என்றும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பாக, அம்னோ பொதுக்கூட்டம், வரும் டிசம்பர் 5 லிருந்து டிசம்பர் 9-ம் தேதிக்குள் நடைபெறலாம் என நஜிப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.