Home நாடு வண்ணம் பூசுவதற்காக திருவள்ளுவர் சிலை மூடப்பட்டது: பள்ளி நிர்வாகம்

வண்ணம் பூசுவதற்காக திருவள்ளுவர் சிலை மூடப்பட்டது: பள்ளி நிர்வாகம்

894
0
SHARE
Ad

Thiruvalluvarகோலாலம்பூர் – நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் வருகையை ஒட்டி, மாம்பாவ் ஷாங்காய் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் முகப்பில் நிறுவப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்ட தகவலை அப்பள்ளி நிர்வாகம் மறுத்திருக்கிறது.

திருவள்ளுவர் சிலை அகற்றப்படவில்லை என்றும், அதற்கு புதிதாக வண்ணம் பூசும் நோக்கத்தில் தான் அது மூடப்பட்டதாகவும் பள்ளியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் எப்எம்டியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நெகிரி செம்பிலான் மஇகாவும், அப்பள்ளி தலைமையாசிரியர், மற்ற ஆசிரியர்களும் கேள்வி கேட்காமல் மௌனமாக இருப்பதை பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி சாடியிருக்கிறார்.

#TamilSchoolmychoice