Home Uncategorized பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்தனர்!

பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்தனர்!

900
0
SHARE
Ad

panneer selvam-palanisamy-comboசென்னை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று திங்கட்கிழமை மதியம் நேரில் சந்தித்து கைகுலுக்கி இரு அணிகளையும் இணைத்தனர்.

பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்களின் படி கட்சியை ஒற்றுமையாக வழி நடத்திச் செல்லவும் தாங்கள் இருவரும் இணைவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.