Home இந்தியா ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் இலாகா!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் இலாகா!

817
0
SHARE
Ad

PANNEER SELVAM-FEATUREசென்னை – நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய அமைச்சரவையின் படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையும், உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி மேம்பாடு, குடியிருப்பு கட்டுப்பாடு, நகர்ப்புற ஊரமைப்பு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகிய இலாகாக்கள் ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை டி.ஜெயக்குமார் வசம் இருந்த இலாகாக்களில் திட்டமிடுதல், சட்டமன்றம், தேர்தல் கடப்பிதழ் ஆகிய இலாகாக்களும் துணை  ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.