இதனால், 233 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றப் பேரவையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதிமுக ஆட்சி கவிழுமா என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆளுநரைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக அரசுக்குத் தாங்கள் தந்து வரும் ஆதரவை மீட்டுக் கொள்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
அவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில அரசாங்கம் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஓர் உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இது மீண்டும் கூவத்தூர் உல்லாச விடுதியில் அரங்கேறிய கூத்துகளை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.
மற்ற அரசியல் தலைவர்களும் ஸ்டாலினின் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னையிலிருந்து புறப்பட்டு மும்மை சென்றடைந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.