Home இந்தியா அமைச்சர் வேலுமணி கட்சியிலிருந்து நீக்கம் – தினகரன் அதிரடி!

அமைச்சர் வேலுமணி கட்சியிலிருந்து நீக்கம் – தினகரன் அதிரடி!

691
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி.தினகரன் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.

ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அமைச்சர் தங்கமணியையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிவிப்பில், கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து எஸ்.பி.வேலுமணி நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக சுகுமார் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அண்மையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, தினகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பழனிசாமியைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்தார்.

இதனையடுத்து, பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்களான தங்கமணியையும், வேலுமணியையும் அடுத்தடுத்து தினகரன் நீக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.