Home நாடு குவான் எங் மீது செப்டம்பர் 4-ல் நடவடிக்கை: எம்ஏசிசி

குவான் எங் மீது செப்டம்பர் 4-ல் நடவடிக்கை: எம்ஏசிசி

970
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர் – பினாங்கு மாநில செயலவை உறுப்பினர் பீ பூம் போ கைது செய்யப்பட்டது, “சட்டவிரோதமானது” எனக் கருத்துத் தெரிவித்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், கொடுக்கப்பட்ட 48 மணி நேர கெடுவில் மன்னிப்புக் கேட்கவில்லை என்பதால், வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடவடிக்கை எடுக்கவிருப்பதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்த விவகாரத்தைக் கடுமையாக கையாளவிருப்பதாகவும், சட்டப்பூர்வப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் சுல்கிப்ளி தெரிவித்திருக்கிறார்.