Home உலகம் மலாய் அதிபருக்கான நீதிப்பேராணையை வெளியிட்டார் லீ!

மலாய் அதிபருக்கான நீதிப்பேராணையை வெளியிட்டார் லீ!

884
0
SHARE
Ad

Lee-Hsien-Loong-007சிங்கப்பூர் – வரும் 2017-ம் ஆண்டிற்கான அதிபர் தேர்தலில், மலாய் இனத்தவர்கள் மட்டும் தான் போட்டியிட முடியும் என்பதற்கான நீதிப்பேராணையை சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் வெளியிட்டார் என சிங்கப்பூர் தேர்தல் ஆணையம் இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

மேலும், வரும் செப்டம்பர் 13-ம் தேதி, 9 கிங் ஜார்ஜ் அவென்யூவில் உள்ள மக்கள் சங்கத்தின் அரங்கில், வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்றும், வரும் செப்டம்பர் 23-ம் தேதி, தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது.