Home நாடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே சிறந்த சுதந்திர தினப் பரிசு: நஜிப்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே சிறந்த சுதந்திர தினப் பரிசு: நஜிப்

1040
0
SHARE
Ad

NajibNationalday2017கோலாலம்பூர் – மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் சிறந்த சுதந்திர தினப் பரிசு என்னவென்றால், வாக்குறுதிகளை அளித்து அதனை அவ்வப்போது நிறைவேற்றுவதே என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.

தனது தலைமையிலான அரசு, குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் நஜிப், தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திலும், மக்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தும் என்றும் இன்று புதன்கிழமை நடைபெற்ற தேசிய தினம் 2017 நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.

 

#TamilSchoolmychoice