Home நாடு “தனித்துப் போட்டியிடுவது கேவியஸ் உரிமை” – டாக்டர் சுப்ரா

“தனித்துப் போட்டியிடுவது கேவியஸ் உரிமை” – டாக்டர் சுப்ரா

881
0
SHARE
Ad

subra-dr-mic penang agm-25082017ஈப்போ – இன்று ஈப்போவில் நடைபெற்ற மஇகா பேராக் மாநிலப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேசிய முன்னணி அனுமதி அளிக்காவிட்டால், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தனித்துத் தன்னிச்சையாகப் போட்டியிடுவது அவரது உரிமை என்றும் இன்னொரு கட்சியின் அத்தகைய முடிவில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினார்.

அதே வேளையில் பகாங் மாநிலத்தில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடுவது உறுதி என்றும் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தேசிய முன்னணி அனுமதி அளிக்காவிட்டால் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தானே தன்னிச்சையாக, தனித்துப் போட்டியிடப் போவதாக, நேற்று சனிக்கிழமை மலாக்கா மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாட்டில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் கேவியஸ் அதிரடியாக அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

“தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தேசியத் தலைவர் தேசிய முன்னணி ஒரு தொகுதியில் போட்டியிட அனுமதி அளிக்காவிட்டால், தன்னிச்சையாகத் தனித்துப் போட்டியிடுவேன் என்று கூறுவது அவரது உரிமை. மற்றொரு கட்சி விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், அதே வேளையில் மஇகாவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒருவர், சுயேச்சையாக தேசிய முன்னணியை எதிர்த்துப் போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக மஇகாவிலிருந்து நீக்கப்படுவார்” என்றும் டாக்டர் சுப்ரா எச்சரித்தார்.

கேவியஸ் சுயேச்சையாகவோ, தனித்தோ தேசிய முன்னணிக்கு எதிராகப் போட்டியில் இறங்கினால் அது குறித்து முடிவெடுக்க வேண்டியது, தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்தான் என்றும் டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.