Home கலை உலகம் பிக் பாஸ்: காஜல் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ்: காஜல் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

794
0
SHARE
Ad

kajal-big bossசென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரசிகர்களின் வாக்களிப்புக்கு ஏற்ப காஜல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசன், முதலிலேயே சிநேகனைப் பார்த்து “இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை” என இழுத்து “நீங்கள் இரசிகர்களால் காப்பாற்றப்பட்டு விட்டீர்கள்” என பலத்த கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார்.

பின்னர், ஜூலி, ஆர்த்தி இருவரையும் தனியறைக்குள் (கன்பெஷன் ரூம்) அழைத்த கமல், “நீங்கள் இருவரும் ஒருவாரம் மட்டும் இருப்போம்” என ஏன் கூறினீர்கள் என்று கேட்டார். இனியும் அவ்வாறு கூறக் கூடாது என்று கட்டளையிட்ட கமல் பின்னர், ஜூலி, ஆர்த்தி இருவரும் பிக்பாஸ் இல்லத்தில் தொடர்வார்கள் என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த வாரம் இரசிகர்களால் வெளியேற்றப்படுபவர் காஜல் என்றும் கமல் அறிவித்தார்.