Home கலை உலகம் பிக் பாஸ் இல்லத்தில் சக்தி மீண்டும் நுழைந்தார்

பிக் பாஸ் இல்லத்தில் சக்தி மீண்டும் நுழைந்தார்

922
0
SHARE
Ad

Sakthi-Vasu - big bossசென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளியேறிய ஸ்டார் விஜய்யின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சக்தி வாசு மீண்டும் பங்கேற்றார்.

நேற்றைய நிகழ்ச்சியில் சக்தி வாசு பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் அனுமதிக்கப்படுவதாக கமல்ஹாசன் கூறி, சக்தியை அனுப்பி வைத்தார்.

ஒரு முகமூடி அணிந்து கொண்டு உள்ளே வந்த சக்தி வாசுவை பிக் பாஸ் வீட்டின் மற்ற பங்கேற்பாளர்கள் வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் முகமூடி அணிந்த ஒரு குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து, ஆரவ்வை கைவிலங்கிட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.

அவருக்கு என்ன ஆனது என்பது கொஞ்ச நேரம் தெரியவில்லை. ஆனால் பின்னர், கன்பஷன் ரூம் என்று அழைக்கப்படும் தனியறைக்குள் ஆரவ் காணப்பட்டார். ஆரவ்வை முகமூடி அணிந்த குழுவினர் வெளியே அழைத்துச் சென்றது ஒரு விளையாட்டுதான் என்று கூறிய கமல்ஹாசன், “என்ன பயந்து விட்டீர்களா ஆரவ்? சும்மா ஒரு விளையாட்டுதான்” என்று கூறி ஆரவ்வை மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்தார்.

அவரை பிக் பாஸ் வீட்டின் பங்கேற்பாளர்கள் வரவேற்றனர்.