Home உலகம் வடகொரியா அணுகுண்டு சோதனை – அமெரிக்கா பதில் தாக்குதலா?

வடகொரியா அணுகுண்டு சோதனை – அமெரிக்கா பதில் தாக்குதலா?

989
0
SHARE
Ad

Kim Jong Un-north koreaபியோங்யாங் – வடகொரியா சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனை நடத்தியிருப்பதாகவும், சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரக குண்டுகளைத் தயாரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், வடகொரியா மீது தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

வடகொரியாவுடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருக்கும் நாடுளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவும் யோசித்து வருவதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.