Home நாடு இரு உள்ளூர் திரைப்படங்களுக்குத் தடை ஏன்? – சாஹிட் விளக்கம்!

இரு உள்ளூர் திரைப்படங்களுக்குத் தடை ஏன்? – சாஹிட் விளக்கம்!

808
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiகோலாலம்பூர் – கடந்த ஆண்டு, இரு உள்ளூர் திரைப்படங்கள் உட்பட மொத்தம் 10 படங்களுக்கு மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம், அனுமதியளிக்க மறுத்துவிட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

“சிண்டிகேட்”, “பைட்” என்ற இரு உள்ளூர் திரைப்படங்களில் அரசாங்கத்தையும், நாட்டையும் இழிவுபடுத்தும் வகையிலான கருத்து இருப்பதால், அவை பொதுமக்களின் பார்வைக்கு வராமல் தடை செய்யப்பட்டன என்றும் சாஹிட் ஹமீடி குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மட்டும், 1,874 உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்கள் தணிக்கை வாரியத்தின் பார்வைக்கு வந்தன என்றும், அவற்றில் 2 உள்ளூர் திரைப்படங்கள் உட்பட 10 திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன என்றும் தணிக்கை வாரியம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் சாஹிட் சித்தியவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் ஃபௌசி சஹாரிக்கு அளித்த எழுத்துப் பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice