Home இந்தியா கௌரி கொலை: 3 பகுத்தறிவாளர்களைக் கொன்ற ‘அதே’ 7.65 எம்எம் துப்பாக்கி!

கௌரி கொலை: 3 பகுத்தறிவாளர்களைக் கொன்ற ‘அதே’ 7.65 எம்எம் துப்பாக்கி!

1313
0
SHARE
Ad

gauri-lankesh-7592பெங்களூர் – இந்துத்துவா குறித்து தொடர்ந்து விமர்சனங்களை தனது பத்திரிகை வாயிலாகத் தெரிவித்து வந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் முன் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவில் அவர் உடம்பில் இருந்து மூன்று தோட்டாக்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 10 மீட்டர் இடைவெளியில் சுடப்பட்டதில் அவரது தோள் பகுதில் ஒரு தோட்டாவும், வயிற்றுப்பகுதியில் 2 தோட்டாக்களும் உள்ளே சென்றிருப்பதாக அறிக்கை கூறுகின்றது.

இந்நிலையில், அந்தத் தோட்டாக்களை ஆய்வு செய்ததில், இக்கொலையில், 7.65 எம்எம் இரக நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதே இரக துப்பாக்கி தான், கடந்த 2015-ம் ஆண்டு, ஆகஸ்ட் 30-ம் தேதி, தர்வாத் பகுதில், கன்னடப் பண்டிதரும், பகுத்தறிவாளருமான எம்.எம்.கல்புகாரி (வயது 77) கொலையில் பயன்பட்டிருக்கிறது என்றும், அதே இரக துப்பாக்கி தான் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகாராட்ஷரா பகுத்தறிவாளர்களான கோவிந்த் பஞ்சாரேவையும், 2013-ம் ஆண்டு நரேந்திர தப்ஹோல்கரையும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனவே, பெங்களூர் காவல்துறை, மகாராஷ்ரா காவல்துறையின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு, பகுத்தறிவாளர்களின் கொலைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரே துப்பாக்கி தானா? என்பதை உறுதி செய்ய தடவியல் நிபுணர்களின் துணையை நாடியிருக்கிறது.

அது உறுதியானால் இக்கொலைகளையெல்லாம் செய்தது ஒரே கும்பல் தான் என்பதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை குறிப்பிட்டிருக்கிறது.