Home இந்தியா ‘துப்பாக்கியால் குரலை நிறுத்துவது அசிங்கம்’ – கௌரி கொலைக்கு கமல் கண்டனம்!

‘துப்பாக்கியால் குரலை நிறுத்துவது அசிங்கம்’ – கௌரி கொலைக்கு கமல் கண்டனம்!

1071
0
SHARE
Ad

kamal-hassan-சென்னை – மூத்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஸ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்துத்துவா குறித்துக் கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தவர் கௌரி.

கௌரியின் படுகொலை இந்தியா முழுவதும் பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கௌரியின் கொலை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருக்கும் கருத்தில், “வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர துப்பாக்கியைப் பயன்படுத்தி குரலை நிறுத்துவது என்பது மிக அசிங்கமான வெற்றி. கௌரி லங்கேசின் பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கமல் தெரிவித்திருக்கிறார்.