Home வணிகம்/தொழில் நுட்பம் ‘ஆசியான் வர்த்தக விருது’ பெற்றது ஏர் ஆசியா!

‘ஆசியான் வர்த்தக விருது’ பெற்றது ஏர் ஆசியா!

749
0
SHARE
Ad

AirAsia-x-in-flightகோலாலம்பூர் – வட்டார அளவில் சுற்றுலாத்துறையின் முன்னுரிமை ஒருங்கிணைப்புப் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்ட ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்திற்கு ஆசியான் வர்த்தக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், ஆசியான் ஒருங்கிணைப்பு என்பது எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்கைகளைக் கொண்ட மக்களைக் கொண்டது. ஒரு தாளில் குறிப்பிடுவது போலான சமுதாயம் அது கிடையாது. மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நேரடியாகச் சென்று அனுபவங்களைப் பெறுவது, சுற்றுலா மற்றும் பயணங்களில் நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது, இதுவரையும் இணைந்திராத பல சுற்றுலாத் தளங்களை இணைத்து புதிய விநியோக வளையத்தை ஏற்படுத்துவது” என்று டோனி தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதன் அடிப்படையில், ஏர் ஆசியா கடந்த ஆண்டு மட்டும், 13.4 மில்லியன் மக்களை ஆசியாவிற்குள் அழைத்துச் சென்றிருக்கிறது என்றும் டோனி குறிப்பிட்டிருக்கிறார்.