Home நாடு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் உதவித் தலைவர் ஜசெக குலசேகரன்

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் உதவித் தலைவர் ஜசெக குலசேகரன்

1099
0
SHARE
Ad

Kulasegaran-DAP-MPகோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பானில் போதிய இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லை என வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் முதற்கொண்டு பலரும் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியில் சில தலைமைத்துவ மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பக்காத்தானின் தேசிய உதவித் தலைவராக ஜசெகவின் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர் அவர் பக்காத்தானின் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்குப் பதிலாக அமானா கட்சியின் ஹூசாம் மூசா தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதே வேளையில் சபா மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் சபா மாநிலத்தின் பிகேஆர் தலைவர் கிறிஸ்டினா லியூ பக்காத்தான் கூட்டணியின் மற்றொரு உதவித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தியர்களுக்கும், சபா மக்களுக்கும் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக பக்காத்தான் தலைவர் துன் மகாதீர் தெரிவித்திருக்கிறார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர் மகாதீர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

பக்காத்தான் கட்சியின் மற்ற உதவித் தலைவர்களாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர், சரவாக் ஜசெக தலைவர் சோங் சியெங் ஜியென், அமானா கட்சியின் துணைத் தலைவர் சாலாஹூடின் அயூப் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர்.