Home Slider சுல்தான் மறைவு: கெடாவில் நாளை பொதுவிடுமுறை!

சுல்தான் மறைவு: கெடாவில் நாளை பொதுவிடுமுறை!

1508
0
SHARE
Ad

flag half mast kedah newகோலாலம்பூர் – கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் காலமானார்.

அவரது மறைவையடுத்து, கெடா மாநிலத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளையில், நாளை முதல் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா முகமது ஹனிபா அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் சமயத்தில் மாநிலத்தின் அனைத்து கொண்டாட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

எனினும், யுபிஎஸ்ஆர் தேர்வு மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என அகமட் பாஷா தெரிவித்திருக்கிறார்.