Home இந்தியா சசிகலா நீக்கம்: அதிமுக-வில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது!

சசிகலா நீக்கம்: அதிமுக-வில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது!

1103
0
SHARE
Ad

Sasikalaசென்னை – அதிமுக பொதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை, அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுக-வில் இனி யாரும் பொதுச்செயலாளராகப் பதவியேற்க முடியாது என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனிடையே, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் செயல்படுவார்கள் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.