Home கலை உலகம் நடிகை டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரியின் சகோதரர் மகள் மாயம்!

நடிகை டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரியின் சகோதரர் மகள் மாயம்!

1879
0
SHARE
Ad

discosanthiசென்னை – நடிகை டிஸ்கோ சாந்தி, நடிகை லலிதா குமாரியின் சகோதரரும், உதவி இயக்குநருமான அருண் மொழி வர்மனின் 16 வயது மகள் அப்ரீனாவைக் கடந்த 5 நாட்களாகக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்புப் படித்து வந்த அப்ரீனா குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த காவல்துறையினர், அங்கிருந்த 56 சிசிடிவி கேமாரவிலும் சோதனையிட்டனர். எனினும், எதிலுமே அப்ரீனா குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

தற்போது, தென்னிந்தியத் திரையுலகில் பலரும் அப்ரீனாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

discosanthi21980-90 களில் வெளிவந்த வெற்றிப் படங்கள் பலவற்றில் நடிப்பிலும், நடனத்திலும் புகழ் பெற்றவர் டிஸ்கோ சாந்தி. அவரது சகோதரி தான் நடிகை லலிதாகுமாரி. கவுண்டமனி, செந்தில் ஆகியோருடன் நகைச்சுவைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

பின்னர், நடிகை லலிதாகுமாரி நடிகர் பிரகாஷ்ராஜையும், டிஸ்கோ சாந்தி நடிகர் ஸ்ரீஹரியையும் மணந்து வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே, லலிதா குமாரி, சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் பிரகாஷ் ராஜிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

டிஸ்கோ சாந்தியின் கணவரான ஸ்ரீஹரி கடந்த 2013-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.