Home நாடு லங்கார் அரச கல்லறைக்கு கெடா சுல்தானின் நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது!

லங்கார் அரச கல்லறைக்கு கெடா சுல்தானின் நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது!

938
0
SHARE
Ad

kedahsultanfuneralprosessionஅலோ ஸ்டார் – இஸ்தானா அனாக் புக்கிட்டிலிருந்து, இறுதிச்சடங்குகள் நடைபெறும் இடத்திற்கு, மறைந்த கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவின் நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது.

8 முதல் 9 குண்டுகள் முழங்க, செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் சுல்தானின் நல்லுடல் அரண்மனையில் இருந்து பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டது.

பின்னர், அங்கிருந்து ஜாலான் துன் ரசாக், ஜாலான் லங்கார் வழியாக லங்கார் அரச கல்லறைக்கு செல்லப்படவிருக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் (வயது 89), இஸ்தானா அனாக் புக்கிட்டில் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.